நடிகை திரிஷாவின் PS2 திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இதே சூட்டோடு பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திரிஷாவின் நியூ லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த ரசிகர்கள் முதல் பாகத்தை காட்டிலும் இதில் திருஷா மிகவும் அழகாக இருப்பதாக கூறி அதிக அளவில் ஷேர் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.