பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் உபயோகப்படுத்திய நகைகளை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரத்தியேகமாக திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு தங்க நகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சில கவரிங் நகைகளையும் அவர்கள் அணிந்து கொண்டும் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் அப்படத்தில் அணிந்திருந்த நகைகளை ஏலம் விட தயாரிப்பு நிறுவன முடிவு செய்துள்ளது. அதனால் அந்த நகைகளை வாங்க பல நகைக்கடை நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.