பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் குந்தவை மற்றும் நந்தினியாக நடித்து வரும் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக நடிகை திரிஷா தனது படகுழுவினருடன் பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களையும் அடிக்கடி பதிவிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷா நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து படப்பிடிப்பின் போது செல்பி எடுத்துள்ள புகைப்படத்தை தற்போது பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் படத்தில் எதிரிகளாக நடித்திருக்கும் குந்தவையும், நந்தினியும் எப்படி செல்பி எடுத்து இருக்காங்க பாருங்க என்று கமெண்ட் செய்து அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.