பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள விக்ரம் மற்றும் திரிஷா தங்களது ட்விட்டர் அக்கவுண்ட்டின் பெயர்களை மாற்றி வைத்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் குறிப்பிட்ட தகவல்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை தொடர்ந்து தற்பொழுது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் நடிகர் விக்ரம் மற்றும் குந்தவையாக நடித்திருக்கும் நடிகை திரிஷா இருவரும் தங்களது ட்விட்டர் கணக்கின் பெயர்களை பொன்னியன் செல்வன் கதாபாத்திரங்களின் பெயர்களாக மாற்றி வைத்துள்ளனர். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.