பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமான படைப்பாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது.

இதன் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களின் கூட்டணியில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video