அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மரணமடைந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களான வில்லன், வாலி, சிட்டிசன் மற்றும் வரலாறு ஆகிய படங்களை தயாரித்தவர் எஸ் எஸ் சக்கரவர்த்தி.

பிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்த நிலையில் தற்போது சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் எஸ் எஸ் சக்கரவர்த்தி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.