விஜய் டிவி உடனான 25 வருட கால உறவை முறித்துக் கொண்டுள்ளார் பிரபலம்.
Producer Quit From Vijay Tv Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட், தாமு உள்ளிட்டோர் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ரவூஃபாவும் வெளியேறி இருப்பதாக அறிவித்துள்ளார்.
25 வருடங்களாக விஜய் டிவியுடன் இணைந்து பணியாற்றி வந்த இவர் தற்போது விஜய் டிவியுடனான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.