Pro Kabadi Update
Pro Kabadi Update

Pro Kabadi Update – சென்ற மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி லீக் போட்டி தொடர் நாளை முடிவடைகிறது.

மொத்தம் 132 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும், 7 போட்டிகள் மட்டுமே நடக்க வேண்டி உள்ளது.

இதனை தொடர்ந்து, பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஏ பிரிவில் தகுதி பெற்று உள்ளது.

மேலும் பி பிரிவில் பெங்களூரு, பெங்கால் அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.

பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி தர பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மற்றும் தமிழ் தலைவாஸ் அணி 21 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 13 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் ஹரியானவை எதிர்கொண்டது.

முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-14 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தது. அடுத்த பாதியில் இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கபட்டது.

ஆனால், திடீரென இரண்டாம் பாதியில் ஆள் அவுடானது தமிழ் தலைவாஸ் அணி, இருந்தும் புள்ளிகள் அதிகம் எடுக்க முயன்ற தமிழ் தலைவாஸ் அணி கடைசி 40 வினாடியில் 40-38 புள்ளிகள் எடுத்து முன்னிலை பெற்றது.

கடைசி நிமிடதில் ஹரியானா அணி ரெய்டு செய்த போது, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனை அவுட் செய்து போட்டியை சமனில் முடித்தார்.