Pro Kabaddi League Mumbai team
Pro Kabaddi League Mumbai team

Pro Kabaddi League Mumbai team – புரோ கபடி லீக் தொடரில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் உ.பி அணியும் மும்பை அணியும் மோதினர்.

இதில் அதிர்ச்சியாக மும்பை அணி தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து வெற்றி பாதையில் தனது 6-வது லீக் புரோ கபடி தொடரில் நடந்த போட்டியில் உ.பி., அணி வெற்றி பெற்று உள்ளது.

124 லீக் போட்டியில் மும்பை அணியும் உ.பி., அணியும் பலபரிசை செய்ததில் அதிரடியாக விளையாடி உ.பி., அணி வெற்றி பெற்று உள்ளது.

ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. போட்டியின் இறுதி வரை இரு அணிகளும் 32-32 என்று சம நிலையில் இருந்தனர். இதனால் போட்டி சமனில் முடியும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், அனைவரும் அதிர்ச்சி அளித்து உ.பி., அணி 32-33 என்று வெற்றி பெற்றது.

போட்டியின் கடைசி நிமிடத்தில் உ.பி, அணி வீரர் பிரசாந்த் 2 பேரை மும்பை அணியின் அவுட் செய்யவே உ.பி., அணி வெற்றியை கைபற்றியாது. உ.பி.,க்கு இது 7-வது வெற்றி ஆகும்.

மும்பை அணி 86 புள்ளிகளுடன் முன்னதாகவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த தோல்வி மும்பை அணிக்கு பெரிய புள்ளி வித்யாசம் இல்லை.

மற்றொரு போட்டியில், பெங்கால் அணி 39-23 என்ற கணக்கில் பாட்னா அணியை வெற்றி பெற்றது.