Pro Kabaddi League Final List
Pro Kabaddi League Final List

Pro Kabaddi League Final List – புரோ கபடி 6-வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 12 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

இரு பிரிவிலும் முதல் இடம் பிடித்த குஜராத் – பெங்களூரு அணிகள் முதலாவது தகுதி சுற்று போட்டியில் மோதின. இதில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிகளும் மோதின.

இதில், வெற்றி பெற்ற பெங்களூர் அணி நேரடியாக இறுதி போட்டியில் மோதும். முதல் வெளியேற்றும் போட்டியில் உ.பி., அணி மும்பை அணியை வென்றது.

இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

3-வது வெளியேறும் சுற்று போட்டியில் டெல்லி – உ.பி., அணிகள் மோதின. அதில் உ.பி., அணி டெல்லி அணியை எளிதில் வீழ்த்தியது.

இந்நிலையில் 2-வது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் குஜராத் – உ.பி., அணிகள் மோதுகின்றனர்.

இன்றைய போட்டியின் முடிவில் எந்த அணி இறுதி போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும் என்பது தெரிய வரும்.