
Pro Kabaddi League 2018: Tamil Thalaivas lost – புரோ கபடி லீக் நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணியை எதிர்கொண்டது.
ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் விளையாட்டில் பங்குபெற வேண்டும். இந்த லீக் போட்டியின் முடிவில் இரு பிரிவுகளில் முதல் 3-இடங்களில் இருக்கும் அணிகளே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் மும்பை, குஜராத் அணிகள் பிளை-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற 99 லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த போட்டியில் முதல் பாதியில் டெல்லி அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியிலும் தனது ஆக்ரோசமானா ஆட்டதின் காரணமாக டெல்லி அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
இதனால் ஆட்டத்தின் இறுதியில் 37-33 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை டெல்லி அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெல்லி அணி தனது 10-வது வெற்றியை பதிவு செய்தது. அதே சமயத்தில் தமிழ் தலைவாஸ் அணி தங்களில் 10-வது தோல்வியை சந்தித்தது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி அணி 30-29 என்ற புள்ளி கணக்கில் அரியானவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டதில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் அணிகளும், பாட்னா மற்றும் புனேரி பால்டன் அணிகளும் மோத உள்ளனர்.