
Pro Kabaddi 2018 – Tamil Thalaivas : 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 45-27 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்று 7-வது வெற்றியை பதிவு செய்தது.
முதல் கட்டத்தில் 15-16 என்ற வெற்றி வாய்ப்பில் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி அடுத்த கட்டதில் இரு முறை ஆல்-அவுட் ஆனது தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பாட்னா அணியின் கேப்டன் தனது பங்குக்கு 13 புள்ளிகளை எடுத்தார்.
இதன் மூலம் தனது முதல் போட்டியில் ஏற்ப்பட்ட தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்த வெற்றி பாட்னா அணிக்கு அமைந்தது.
மேலும் தமிழ் தலைவாஸ் அணிக்கு இந்த லீக் ஆட்டத்தில் இது 8-வது தோல்வி ஆகும்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டதில் குஜராத் அணியும் மும்பை அணியும் மோதியது.
இதில் குஜராத் அணி முன்னாள் சாம்பியனான மும்பை அணியை 39-35 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் இரவு 8 மணிக்கு குஜராத் அணி அரியானா அணியை எதிர்கொள்ள இருக்கின்றது.