Pro Kabaadi Season 6 : 12 அணிகள் பங்கு பெற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 6-வது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் நேற்று பாட்னா மற்றும் டெல்லி அணிகள் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கதில் இருந்து இரு அணி வீரர்களும் விட்டு கொடுக்காமல் விளையாடினர்.
இதனால் ஆட்டத்தில் இந்த அணி வெல்லும் இந்த அணி தோல்வி அடையும் என கூறமுடியவில்லை.
இருந்தும் சற்றே கடுமையாக போராடி பாட்னா அணி முதல் பாதியில் 18-17 என முன்னிலை பெற்றது.
அடுத்த பாதியில் டெல்லி அணி பாட்னா அணிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 38-35 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை பாட்னா அணி தனது ஆறாவது வெற்றியை பதிவிட்டது. மற்றும் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது.
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் மும்பை மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதினர்.
ஆட்டதின் தொடக்கம் முதலே மும்பை அணி முன்னிலை பெற்றது. இறுதி வரையிலும் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பின்தங்கியே இருந்தது. இறுதியில் மும்பை அணி 36-22 என தமிழ் தலைவாஸ் அணியை வெற்றி பெற்றது.