பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆனா மகேஷ்பாபுவின் புதிய படத்தின் பிரியங்காமோகன் இரண்டாவது கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் செய்யுள்ள்ளது.

தமிழ் சினிமாவில் மூன்று படங்களிலேயே பிரபலமான ஹீரோயினியாக மாறியவர்தான் பிரியங்காமோகன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘டான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்காமோகனுக்கு தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் வரிசையாக குவிந்து வருகிறதாம். அந்த வகையில் இயக்குனர் திரிவிக்ரம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட்டணியில் எஸ்எஸ்எம்பி 28 படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க போகும் ஹீரோயின் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதில் பூஜா ஹெக்டே முதல் பல முன்னணி ஹீரோயின் பெயர்களும் அந்த லிஸ்டில் இருக்கிறதாம். லேட்டஸ்டாக பிரியங்காமோகனும் மகேஷ் பாபு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பிரியங்காமோகன் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரிவிக்ரம் மற்றும் மகேஷ் பாபு கூட்டணி ஒன்று சேர்ந்திருப்பதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.