Priya Prakash Varrier :
ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது.
மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்த ரஜினி கமல் நாயகி அமலா – அதுவும் யார் படத்தில் பாருங்க.!
இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில் இவர் கண்ணடிக்கும் வீடியோ பெரும் புகழை பெற்றது. ஆனால் அந்த படத்தின் போது இவருக்கும் இயக்குனருக்கும் கடும் மோதல் நடந்தது.
மேலும் திடீரென புகழ் வெளிச்சம் அடைந்ததால் இவர் பயங்கரமாக பந்தா கட்டியதாகவும் இயக்குனர் இவர்மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக இவரும் டிவிட்டரில் தொடர்ந்து இயக்குனருக்கு பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தார்.
இதனாலே இவருக்கு வேறெந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் மேலும் முதல் படம் தோல்வியால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை இவர்மீது விழுந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.