பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் பேட்டியின் தகவல் வைரல்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சிம்புவின் பத்து தல, லாரன்ஸின் ருத்ரன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவரிடம் இருந்து வாய்ப்பு கிடைத்தால் கதை கூட கேட்காமல் நடிக்க ரெடி என கூறி இருக்கிறார். மேலும் மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழைத்தாலும் கதை கேட்காமல் நடிப்பேன் என கூறி இருக்கிறார்.