உங்களோட சைஸ் என்ன என ஆபாசமாக கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து பின்னர் மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள் பிரியா பவானி சங்கர்.

தற்போது தமிழ் சினிமாவில் படு பிசியாக இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு அவர் “நான் 34டி பிரதர். மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையிலும் உள்ள பெண்களுக்கும் மார்பகங்கள் உள்ளது. உங்கள் பார்வையை நீங்கள் அங்கு உற்று நோக்கி பார்த்தாலும் தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார். இவருடைய இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் இப்படியான ஆட்களுக்கு இப்படித் தான் பதில் சொல்ல வேண்டும் என பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.