எல்லாமே ரெட் கலர் தான் என படுக்கை அறையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

தமிழ் சின்னத்திரையில் செய்தி தொடர்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது ஹீரோயினியாக பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் இருந்து ரெட் கலர் உடையில் படுத்த படி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

ரெட் ரெட் என இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

https://www.instagram.com/p/Cp9Qn1bLgxT/?igshid=YmMyMTA2M2Y=