பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வைரல் .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிவாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பிரின்ஸ் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற பிரபல OTT தளத்தில் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் ட்ரெய்லருடன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.