சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலான ஹூ ஆம் ஐ பாடல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் இருந்து தமன் இசையில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்திற்கான ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது பாடலான “ஹூ ஆம் ஐ” என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அது தற்பொழுது வைரலாகி வருகிறது.

YouTube video