தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ள பிரின்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

தேவகோட்டை என்னும் ஊரில் சுதந்திரத்திற்கு பிறகும் சில பிரிட்டிஷ்காரர்கள் தங்கி விடுகின்றனர். இப்படியான நிலையில் பள்ளி வாத்தியாரான சிவகார்த்திகேயன் பிரிட்டிஷ்கார பெண் ஜெஸ்ஸி என்பவரை காதலிக்கிறார். முதலில் பிரெஞ்சுக்காரப் பெண் என நினைத்து ஓகே சொல்லும் சிவகார்த்திகேயனின் அப்பா சத்யராஜ் பிறகு அந்த பெண் பிரிட்டிஷ்காரி என தெரிய வந்ததும் மறுப்பு தெரிவிக்கிறார். அடுத்து என்ன நடந்தது இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

சிவகார்த்திகேயன், சத்யராஜ் என்ன படத்தில் நடித்துள்ள அனைவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

காமெடி கதை களத்துக்கு ஏற்ப பிஜிஎம் கொடுத்து படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளார் தமன். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகாக்கி உள்ளது.

ஜதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் இந்த படத்தையும் காமெடி கலாட்டாவாக இயக்கியுள்ளார்.

படத்தின் பிளஸ் :

1. படத்தின் காமெடி

2. சிவகார்த்திகேயன், சத்யராஜ் என படத்தில் நடித்தவர்களின் நடிப்பு.

3. அனுதீப் இயக்கம்

படத்தின் மைனஸ் :

1. வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
பிரின்ஸ் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
prince-movie-reviewமொத்தத்தில் பிரின்ஸ் தீபாவளிக்கு ஏற்ற காமெடி கலாட்டா, குடும்பத்தோடு சேர்ந்து நிச்சயம் படத்தை பார்க்கலாம்.