பிரின்ஸ் திரைப்படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பாடலின் முழு வீடியோ இன்று மாலை இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிவாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா, பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்திருந்த நிலையில் அனைவருக்கும் பேவரட் பாடலான பிம்பிலிக்கு பிளாப்பி பாடலின் முழு வீடியோ இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.