பூஜா ஹெக்டே வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்தை கிண்டல் அடித்த பிரேம்ஜியின் கமெண்ட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர். ஆனால் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு அவர் தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது தனது படப்பிடிப்புகளை முடித்துவிட்டு களைப்போடு படுத்துக்கொண்டு எடுத்திருக்கும் செல்பி புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகரான பிரேம்ஜி, கமல்ஹாசன் அவர்களின் நாயகன் திரைப்படத்தில் வரும் சிறிய வீடியோவை பகிர்ந்து கலாய்த்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.