Premier Badminton League
Premier Badminton League

Premier Badminton League – மும்பையில் இன்று தொடக இருக்கும் பிபிஎல் போட்டியில் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பி.வி.சிந்துவும், புனே 7 எஸஸ் அணியின் கரோலினா மரினும் மோத இருக்கின்றனர்.

நடந்த முடிந்த பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் போட்டியின் பட்டம் வென்ற உற்சாகத்தில் களமிறங்க உள்ளார். மொத்தம் இந்த தொடரில் 9 அணிகள் பங்கேற்க உள்ளனர்.

ஹைதராபாத் அணிக்கு சிந்து, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்கு சாய்னா, புனே அணிக்கு கரோலினா, மும்பை அணிக்கு சமீர் வர்மா, டெல்லி அணிக்கு எச்.எஸ்.பிரணாய்,

சென்னை அணிக்கு பாருபல்லி என 9 அணிகள், இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டி தொடர், இன்று தொடங்கி, 23 நாட்கள் நடைபெறும் வகையில் அட்டவணை போடப்பட்டு உள்ளது.

பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே என பல்வேறு இடங்களில் போட்டி நடைபெற உள்ளது.

ஜனவரி-12 ஆம் தேதி அரையிறுதி மற்றும் 13-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது.