துணிவு படத்தில் நடித்து இருப்பதை டப்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார் பிரபல நடிகர் பிரேம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

துணிவு படத்தில் இவரும் இருக்காரா?? சத்தம் இல்லாமல் டப்பிங்கை முடித்து அறிவித்த நடிகர் - வைரலாகும் போட்டோ.!!

2023 பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி சந்திரன் உட்பட பலர் இணைந்து நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் இந்த படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இப்படியான நிலையில் இந்த படத்தில் தானும் நடித்திருப்பதாக டப்பிங் பேசிய புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார் நடிகர் பிரேம்குமார். அஜித் குமாரின் பெரிய பக்தி படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

துணிவு படத்தில் இவரும் இருக்காரா?? சத்தம் இல்லாமல் டப்பிங்கை முடித்து அறிவித்த நடிகர் - வைரலாகும் போட்டோ.!!

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் இவரது பதிவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.