
அடுத்தடுத்து வெளியேற்றங்களை தொடர்ந்து ராஜா ராணி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் பிரவீன் பென்னட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் ஆல்யா மானசா.

திடீரென இவர் இந்த சீரியலை விட்டு விலக அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் நடிக்க தொடங்கினார். மேலும் அர்ச்சனா வேடத்தில் நடித்து வந்த விஜய் அர்ச்சனா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்ட தற்போது அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரியல் விஸ்வநாதன் இந்த சீரியலில் இருந்து விலக தற்போது அவருக்கு பதிலாக ஆஷா கவுடா நடிக்கிறார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த வெளியேற்றங்கள் நடந்து வரும் நிலையில் சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் அவர்களும் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனி வரும் நாட்களில் ரமேஷ் பாரதி என்பவர் இந்த சீரியலை இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.