Actor Prasanth

Actor Prasanth : தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் அறிமுகமான போது அவரின் முதல் ஹீரோ பிரசாந்த் தான்.

இவர் தற்போது தன்னுடைய அப்பாவான தியாகராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் தெலுங்குவில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் வினய விதேய ராமா என்ற படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

தமிழில் ஹீரோவாக நடித்த ஒருவர் மற்றோரு மொழியில் வில்லனாக நடிப்பது ஒன்றும் தவறில்லை என்று ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரில் அப்படத்தில் பிரசாந்த் வில்லனாகவும் நடிக்கவில்லை, ராம் சரணின் 4 நண்பர்களில் ஒருவராக தான் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த் தற்போது சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ள்ளது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வினய விதேய ராமா ட்ரைலர் :

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.