![maxresdefault (2)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/maxresdefault-2-696x392.webp)
எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார் முக்கிய போட்டியாளர் பிரதீப் ஆண்டனி.
Pradeep Antony Quit With Redcard : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அன்னபாரதி குறைந்த ஓட்டுகள் பெற்று இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேற உள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/images-89-jpeg.webp)
இந்த நிலையில் இன்றைய பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்னொரு போட்டியாளர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவர் பலருக்கும் ஃபேவரைட்டாக இருந்து வந்த பிரதீப் ஆண்டனி என்பதுதான் பெரிய ஷாக்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/11/images-88.jpeg)