Prabhu Deva Next :
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன மாஸ்டர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர் பிரபு தேவா.
இவர் இது வரை பல வெற்றி படங்களில் நடித்துள்ளார், முன்னணி நடிகர்களின் படங்களின் நடன இயக்குநராவும் பணி புரிந்துள்ளார்.
மேலும் தளபதி விஜயை வைத்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தையும் இயக்கி இருந்தார்.
தற்போது தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளிலும் ஏ.எல் விஜய் இயக்கத்தில் தேவி 2, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு :