தளபதி விஜய்யும், பூஜா ஹெக்டேவும் பீச்சில் சந்திப்பு: வைரலாகும் ஷூட்டிங் போட்டோ..
தளபதி விஜய்யின் கடைசிப்பட ஷீட் குறித்து, பூஜா ஹெக்டே தற்போது கொடுத்த அப்டேட் பார்ப்போம்..
மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
ஆனால், எந்தப் படமும் இவருடைய கதாபாத்திரங்களை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை. இதனால், இவருக்கு வரும் வாய்ப்பும் ராஷ்மிகாவிற்கு சென்று விடுகிறது. குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ராஷ்மிகா இன்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களுக்கு பிறகு பூஜா ஹெக்டே நடிக்கும் 3-வது தமிழ்ப்படம் தளபதி-69. இப்படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, விஜய் மற்றும் பாபி தியோல் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இப்போது சென்னை கடற்கரையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இன்றுடன் தளபதி69 படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு முடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
இச்சூழலில், 2024-ம் ஆண்டின் கடைசி ஷூட் இதுதான் என பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டேயின் கால்கள்-டாப் ஆங்கிள் போட்டோ இடம் பெற்றுள்ளது. சென்னை கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே மேலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.