காசுக்காக என்னவேணாலும் பண்ணுவிங்களா என பீஸ்ட் பட நாயகி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Pooja Hegde in Video Controversy : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்து : பிரபல கிரிக்கெட் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

இந்த படம் மூலம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. பீஸ்ட் திரைப்படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பிரபல Dance Master திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siva Shankar Master Passed Away | RIP

அதாவது மதுபானத்தை விளம்பரப்படுத்தி வகையில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனைப் பார்த்த ரசிகர்கள் காசுக்காக என்னவேணாலும் செய்வீர்களா? மது மனிதனுக்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் ஒன்று என்பது உங்களுக்கு தெரியாதா? பணத்துக்காக இப்படி விளம்பரம் செய்து பல உயிர்களை காவு வாங்கி விடாதீர்கள் என்னை திட்டி தீர்த்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.