அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என பிரபல நடிகருடன் இணைந்து நடித்தது பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பூஜா ஹெக்டே.

Pooja Hegde About Joins With Amitabh Bachan : தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழக கிரிக்கெட் அணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்தது குறித்து புகைப்படத்தை வெளியிட்டு அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இப்போது நனவாகி விட்டது என தனது மகிழ்ச்சியை தெரிவித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Ajith உடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல இயக்குனர் – Massive Update.! | Valimai | Latest News | HD

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.