‘பொன்னியின் செல்வன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விரைவில் வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்.. ரிலீஸ் எங்கே தெரியுமா? வைரலாகும் தகவல்.

மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்ஸ் ,டீசர் மற்றும் முதல் பாடல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல்.. ரிலீஸ் எங்கே தெரியுமா? வைரலாகும் தகவல்.

அதாவது இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ஹைதராபாத்தில் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஐதராபாத் செல்லும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.