பொன்னியின் செல்வன் படத்தின் “முதல் பாடல்” வெளியாகும் தேதியை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கி வரும் படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது பொன்னி நதி என்று பெயரிடப்பட்டு, போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்து, சோழர்களின் உலகில் இசைப் பயணத்தைத் தொடங்குவோம் என்று குறிப்பிட்டு இப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்ற தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டருடன் இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.