Petta Vs Viswasam
Petta Vs Viswasam

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் பேட்ட.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேலும் சில தினங்களுக்கு முன்னர் தான் ரஜினிகாந்த் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.

மேலும் தற்போது மற்ற நடிகர் நடிகர்களுக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை 2019-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் தல அஜித்தின் விஸ்வாசம் படம் தள்ளி போகுமா? என விசாரித்ததலில் விஸ்வாசம் படம் எக்காரணத்தை கொண்டும் பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளி போகாது. அறிவித்த படி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பொங்கல் 2019 தல மற்றும் தலைவர் பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Petta and Viswasam
Petta and Viswasam
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.