Pongal 2019 movies

Pongal 2019 Movies : அஜித்தின் விஸ்வாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படங்களுடன் போட்டி போட இருப்பதை பிரபல நடிகர் ஒருவர் ட்வீட் செய்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலே பெரும்பலாலும் சோலோவாக வெளியாகும். மற்ற சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என்பதால் ரிலீஸில் இருந்து விலகி கொள்ளும்.

இந்த வருட தீபவாளிக்கும் அதே தான் நடந்தது. பல படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவித்து இறுதியில் மூன்று படங்கள் மட்டும் தான் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என இதுவரை பெரிய பட்ஜெட் படங்களான அஜித்தின் விஸ்வாசம், ரஜினிகாந்தின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது பொங்கல் ரேஸில் மீண்டும் ஒரு புதிய படம் இணைந்துள்ளது. அது வேறு எந்த படமும் இல்லை ஆர்.ஜே.பாலாஜி நடித்து வரும் LKG படம் தான்.

இது குறித்து ஆர்.ஜே பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் விசுவாசமான பேட்ட ரசிகர்களே உங்களை சந்திக்க பொங்கலுக்கு வரேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படங்களில் எந்த படம் ரிலீசாகும் எந்த படம் விலகி கொள்ளும் என்பதை பொங்கல் நெருங்க நெருங்க தான் தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.