வாரிசு படத்துடன் மோத தயக்கம் காட்டி பிரபல நடிகரின் திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த வருட பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாகிய இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

தமிழில் வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகிறது. அதேபோல் தெலுகுவில் வாரிசு படத்துக்கு போட்டியாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் மோத இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் வாரிசு படத்துடன் மோத தயக்கம் காட்டி இந்த படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தெலுங்குவில் இந்த படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.