Political Leaders Condolence to Vivek

விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Political Leaders Condolence to Vivek : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று முன்தினம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவரின் இதயத்தின் இடதுபுறம் வால்வில் முழுமையாக அடைப்பு இருப்பதாக கூறி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணியளவில் விவேக் உயிர் பிரிந்தது.

இவருடைய மறைவைத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vivek Family About Vivek Death

ரஜினிகாந்த் பட அரசியல் தலைவர்கள் பதிவு செய்த இரங்கல் செய்திகள் சில இதோ

சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படத்தில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்- நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.

சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்

நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு – நடிகர் ராகவா லாரன்ஸ்

எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் – இயக்குநர் சேரன்

நாங்கள் கஷ்டப்படும் காலத்தில் இருந்து நெருக்கிய நண்பர்கள் – ரமேஷ் கண்ணா

நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும் – நடிகர் சூரி

மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திறைமைசாலியை இழந்துள்ளோம் – பொன்ராஜ்

விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம் – நடிகர் யோகி பாபு

திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் – திமுக தலைவர் ஸ்டாலின்

நடிகர் விவேக் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நகைச்சுவையால் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் விவேக் என்று தெரிவித்துள்ளார்.

சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

பொதுப்பணிகளில் ஆர்வம் மிகுந்த எனது மாணவரான நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய இயலாதது – சாலமன் பாப்பையா இரங்கல்

Miss u sir.. உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு; வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை -இயக்குநர் அட்லி

“அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்!” – நடிகர் நாசர்.

“எண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி ” – நடிகர் பிரகாஷ் ராஜ்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.