Andra Police

வேலூர் மாவட்டம், மேலகுப்பம் மலை இளவன் தோப்பை சேர்ந்தவன் ராமகிருஷ்ணன், வயது 30. இவர்மீது ஆந்திர மாநிலத்தில் உள்ள தர்மாவரம் போலீஸ் ஸ்டேஷனில் 45 வழக்குகள் நிலுவையில் உள்ளது. செம்மரம் வெட்ட ஆட்களை அனுப்பி ஏஜன்டாக இருந்தான்.

சமீபத்தில், இவன் இளவன் தோப்பில் மறைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து , ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட தனிப்படை போலீசார், நேற்று முன்தினம், சாதாரண உடையில் வந்து, ராமகிருஷ்ணனை துப்பாக்கி முனையில் பிடித்து வந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் , போலீசாரை கொள்ளையர்கள் என கருதி , மரத்தில் கட்டி தர்ம அடி கொடுத்தனர். அப்போது ராமகிருஷ்ணன் தப்பி ஓடினான். தகவல் அறிந்து வந்த ரத்தனகிரி போலீசார் ஆந்திர போலீசாரை மீட்டனர். பின்னர் ராமகிருஷ்ணனை கைது செய்த ஆந்திர போலீசார் , சித்தூருக்கு அழைத்து சென்றனர்.