
PMK leader Anbumani Ramadoss – சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, “பாமக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண பொருட்கள் வழங்கப்படும்” என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கஜா புயல் நிவாரண பணியில் தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால், நிலைமை எளிதாக சமாளித்து இருக்கலாம்.
ஆனால் தற்போது, பாதிக்கப்பட்டுள்ள இடங்களின் சேதங்களை வைத்து பார்க்கும்போது, பாதிக்கபட்ட மக்களுக்கு இன்னும் அதிகமான உதவிகள் தேவைப்படுகிறது.
எனவே பாமகவினர், பாதிக்கபட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
மேலும், பாமக சார்பில் புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்படும் “என்றும் கூறினார்.
மேலும், தமிழக அரசு இராணுவத்தை அழைத்து போர்க்கால அடிப்படையில், அவர்களின் உதவியுடன் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.