Plastic Ban Puducherry
Plastic Ban Puducherry

Plastic Ban Puducherry – புதுச்சேரி: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதை போல, ‘புதுச்சேரி மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவ

திக்கப்படும்’ என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியிலும் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.,

இவ்வாறு நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி பேசியதாவது, “புதுச்சேரியில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல்,

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்” என கூறினார்.

மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதித்து, தற்போது எங்கும் கைப்பைகைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here