PKL Final Today
PKL Final Today

PKL Final Today – கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி புரோ கபடி லீக் 6-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

இறுதி சுற்றில் ஏ மற்றும் பி பிரிவின் முதல் இடத்தில் உள்ள இரு அணிகளும் இறுதி போட்டியில் மோத உள்ளது.

புரோ கபடி லீக் போட்டி இறுதிச் சுற்றில் வெல்ல போவது பெங்களூரு புல்ஸ் அணி மற்றும் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இன்று இரவு மும்பை வொர்லியில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே, இரு அணிகளும் 3 முறை மோதியதில் 2 அணிகளும் தலா ஒரு முறை வென்றன. 1 ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதற்கிடையே குவாலிபையர் ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இரண்டாம் குவாலிபையரில் யுபி யோத்தா அணியை வென்று குஜராத் இறுதிக்குள் நுழைந்து உள்ளது.

முதன் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள குஜராத் அணியில் பிரபஞ்சன், பர்வேஷ் பனிஸ்வால், கேப்டன் ரோஹித் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

வெல்லும் அணிக்கு பரிசு : இன்று இரவு மும்பையில் நடைபெற உள்ள போட்டியில் இரு அணிகளில் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசாக அளிக்கப்படும்.