பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்திருந்தார்.

மேலும் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததை தொடர்ந்து ஒரு வாரத்தில் ரூ.24 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டிருக்கும் படக்குழு அதற்கான அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 27-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டருடன் பகிர்ந்து அறிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.