பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலமான காயங்கள் ஏற்பட்டது.

இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி தற்போது உடல் நலம் தேறி இருக்கும் நிலையில் ‘பணம் உலகை காலி பண்ணிடும்’ என குறிப்பிட்டு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் தகவலை ட்விட்டரில் நேற்றைய தினம் பகிர்ந்திருந்தார். அதன்படி இப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை ட்ரைலராக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.