பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக பல ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது . இப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை ட்ரைலராக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படக்குழு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருப்பதாக போஸ்டருடன் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.