Pettikadai Review

Pettikkadai Review : இசக்கி கர்வணன் இயக்கம், தயாரிப்பு, மற்றும் திரைக் கதையில் சமுத்திர கனி, வர்ஷா பொல்லம்மா,சாந்தினி, சுந்தர் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பெட்டிக்கடை.

கதைக்களம் : 

கார்ப்பரேட் கம்பெனிகளாலும் ஆன்லைன் ஷாப்பிங் மோகத்தாலும் நாம் இழந்த சுதந்திரங்களை பற்றி தெள்ள தெளிவாக பேசும் படம் தான் பெட்டிக் கடை.

அழாகான ஒரு கிராமம், ஆனால் பெட்டி கடையே இல்லாமல் ஆன்லைன்களில் மட்டும் தான் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறது.

இந்த ஆன்லைன் ஷாப்பிங்கை ஒழித்து ஊருக்கும் பெட்டிக்கடை கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறையும் முயற்சிக்கும் போதும் பல உயிர்களை பாலி கொடுக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ஊர் பகுதிக்கு மருத்துவராக பணியாற்ற வரும் ஷாந்தினி ஊர் மக்களுக்காக குரல் கொடுத்து மக்களை ஒன்று சேர்த்து ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எதிராக போராடுகிறார்.

மாநில அரசு முதல் மத்திய அரசு வரை தன்னுடைய கையில் காத்திருக்கும் கார்ப்பரேட் முதலைகளான ஆன்லைன் பொருட்களை எதிர்த்து போராடுவதால் என்னென்ன இன்னல்களை எதிர்கொள்கிறார்கள்? இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதைக்களம்.

நடிகர் நடிகைகள் :

வர்ஷா, பொல்லம்மா, ஷாந்தினி, சமுத்திரக்கனி, சுந்தர் என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரங்களை செவ்வனே முடித்து கொடுத்துள்ளனர்.

தொழில் நுட்பம் :

மரியா மனோகர் இசையமைக்க, அருள் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருளின் ஒளிப்பதிவு எழில் கொஞ்சும் கிராமத்து அழகை நம் கண் முன்னே கொண்டு வருகிறது.

மரியா மனோகர் பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

இயக்கம் :

இசக்கி கர்வணன் அவர்களின் கதை, திரைக்கதை, இயக்கம் மக்களுக்கு ஒரு விழ்ப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஆன்லைன் மோகத்தால் நாம் என்னவெல்லாம் இழக்கிறோம்? இன்று ஆன்லைன் ஷாப்பிங் மோகம் நம்மை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தி ஆளுகிறது என்பதை அழகாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. கதை
2. சமூக கருத்து
3. நாம் மறந்து போன / தொலைத்து விட்ட பெட்டிக்கடைகளை பற்றி பேசியது.

தம்ப்ஸ் டவுன் :

1. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
2. டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
பெட்டிக் கடை விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
pettikkadai-reviewமொத்தத்தில் பெட்டிக்கடை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும். அனைவரும் பார்த்து பாராட்ட வேண்டிய திரைப்படம்.