Petta Vs Viswasam Trailer

Petta Vs Viswasam Trailer : பேட்ட படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளி தல அஜித்தின் விஸ்வாசம் பட ட்ரைலர் புதிய சாதனையை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 28-ம் தேதி இணையத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

ட்ரைலர் வெளியாகிய 5 நாட்களில் 1 கோடியே 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த ட்ரைலரில் விஸ்வாசம் படத்தை கலாய்ப்பது போல் அமைந்திருந்த காட்சிகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது.

இதனையடுத்து டிசம்பர் 30-ம் தேதி வெளியான விஸ்வாசம் ட்ரைலர் வெளியான மூன்றே நாட்களில் 1 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதே போல் விஸ்வாசம் படத்தில் பேட்ட வசனத்திற்கு பதிலடி கொடுக்குமாறு அமைந்திருந்த வசனம் அதனை படு வைரலாக்கி இருந்தது.

இதனால் யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை இருந்த பேட்ட படத்தின் ட்ரைலரை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் சமூக வளையதளங்களில் நான் தான் கிங் என தல அஜித் நிரூபித்துள்ளார். இதனை தல ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Petta Vs Viswasam Most Excepted Movie in 2019 | Thala Ajith | Rajinikanth |Tamil Cinema | Kollywood

Viswasam - Official Trailer | Ajith Kumar, Nayanthara | Sathya Jyothi Films