Petta Vs Viswasam Sensor

Petta Vs Viswasam Sensor : பேட்டைக்கு 6, விஸ்வாசத்துக்கு ஜீரோ என சென்சார் அதிகாரிகள் அதிரடியை கிளப்பி சென்சார் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பெரும்பாலும் இந்த இரண்டு படங்களுமே வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. படக்குழுவினரும் இதே பிளானில் தான் இருந்து வருகின்றனர்.

மேலும் இப்படத்திற்கு சென்சார் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் பேட்ட படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த அறிவிப்பில் படத்திற்கு U சான்றித கிடைத்திருப்பதையும் உறுதி செய்திருந்தனர்.

மேலும் இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பேட்ட படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று வைரலாகி இருந்தது.

அதில் பேட்ட படத்தில் மொத்தம் 6 இடங்களில் கத்தரி போட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் விஸ்வாசம் படத்திற்கு சென்சாரில் ஒரு காட்சிகள் கூட கத்தரிக்கப்படவில்லை.

இதனை டி.இம்மான், எடிட்டர் ருபன் உள்ளிட்டோரும் உறுதி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Petta

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here