Petta Villian

Petta Villian : தென்னிந்தியர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என பேட்ட படம் வில்லன் நவாஸுதீன் சித்திக் கூறியிருப்பது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர்.

குறிப்பாக வில்லன்களாக விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது நவாஸுதீன் சித்திக்கால் தான் இந்த படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஆம் நவாஸுதீன் சித்திக் பால் தாக்கரே வாழ்க்கை வரலாற்று படத்தில் தாக்கரேவாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் தென்னிந்தியர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என தரக்குறைவாக பேசி இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலரும் பேட்ட படத்திற்கு எதிராக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

பேட்ட படத்தின் ட்ரைலர் நேற்று ( டிசம்பர் 28 ) காலை 11 மணிக்கு வெளியாகி யூ ட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.