Petta Trailer Record

Petta Trailer Records : 24 மணி நேரத்தில் பேட்ட பட ட்ரைலரின் நிலை என்ன என தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார் என பலர் இணைந்து நடித்துள்ள படம் பேட்ட.

இப்படத்தின் ட்ரைலர் நேற்று காலை ( டிசம்பர் 28 ) 11 மணிக்கு இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியை 24 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வியூஸ், லைக்ஸ் குறித்த தகவல்கள் என்னவென்று பார்க்கலாம்.

இதுவரை ரியல் டைமில் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதே போல் கிட்டத்தட்ட 550K லைக்ஸ்களை பெற்றுள்ளது.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.